கருவறையின் மஹத்துவம் என்னென்ன? எப்படி தெய்வத்தை வணங்க வேனண்டும்? பல வகை நமஸ்காரங்கள் யாவை? கடவுளுக்கு உரிய ஆறாதனை என்னென்ன? இதனைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
ஆலய கருவறை முன்பு நாம் வழிபாடு செய்தால் பலநூறு கோடி அளவுக்கு ஆற்றல்களை பெற
முடியும் என்பது ஐதீகம்.
ப்ரபஞ்சத்தின் அனைத்து சக்திகளையும் கருவறையில் உள்ள மூலவர் விக்கிரகம் பெற்று
நமக்கு தருகிறது. இத்தகைய சிறப்புடைய கருவறை மூலவரை வழிபாடு
செய்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன.
அவற்றை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். மூலவரிடம் இருந்து வெளியாகும் அருள் சக்தி அலைகள் நமக்கு கிடைக்கும் வகையில்
நடந்து கொள்வது நல்லது.
எல்லா இடங்களிலும் காந்த அலைகள் இருந்தாலும் கருவறையில்தான் அவை நமக்கு ஆற்றல்
தரும் சக்தியாக மாறுகிறது.. இதை கருத்தில் கொண்டே கருவறை எல்லா பக்கமும் மூடப்பட்டுள்ளது.
எனவே கருவறை முன்பு அடிக்கடி தேவை இல்லாமல் குறுக்கே நடமாடுவதை தவிர்க்க
வேண்டும். . அது போல மூலவருக்கு நேர் எதிராக நின்று
வழிபடக் கூடாது. சுவாமிக்கு நேர் எதிரே நிற்பவர் எதிரி ஆவார்
என்று காஞ்சிப் பெரியவர் கூறியுள்ளார்.
கருவறை வெளியே பக்க வாட்டில் இருபுறமும் நின்றுதான் மூலமூர்த்தியை வணங்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
கருவறை வெளியே பக்க வாட்டில் இருபுறமும் நின்றுதான் மூலமூர்த்தியை வணங்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
இன்னும் சொல்லப் போனால் கருவறை வெளியே ஓரமாக நின்றால்தான் இறைவனின் கடைக்கண்
பார்வை நம் மீது விழும். இறைவனின் கடைக்கண் பார்வையில் குளிர்ச்சியும், கருணையும் உண்டு என்பார்கள். அபிராமி கடைக்கண் பட்டால், கல்வி, செல்வம், தளராத மனம், வஞ்சமில்லா நண்பர்கள் கிடைப்பார்கள் என்று
அபிராமி பட்டர் எழுதியுள்ளார்.
எனவே கருவறை வெளியில் இரு பக்கமும் நின்றே வழிபடுதல் வேண்டும்.
சிவபெருமான் தன்னில் பாதியை உமையாளுக்கு கொடுத்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
அதன்படி சிவபெருமானின் வலது பக்கம் சிவனாகிய ஆணும், இடது பக்கம் உமையாளாகிய பெண்ணும் உள்ளனர். இந்த தத்துவத்தின் அடிப்படையில் கருவறை வெளியில் வலது பக்கம் ஆண்களும், இடது பக்கம் பெண்களும் நின்று வழிபடுவது மரபாக உள்ளது.
கருவறையில் இருந்து வெளியில் வரும் காற்றும், அருள் சக்தி அலைகளும் தெய்வீக சக்தி நிரம்பியதாகும். அந்த காற்றையும் சக்தி அலைகளையும் நாம் எந்த அளவுக்கு நம்முள் கிரஹித்துக்
கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது.
கருவறை வெளியில் நிற்கும் போது அவசரம், அவசரமாக மூலவரைப் பார்த்து கும்பிடு போட்டு விட்டு
நகர்ந்து விடாமல், குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்களாவது நின்று
வணங்க வேண்டும். அந்த ஐந்து நிமிடமும் மூச்சை நன்றாக இழுத்து
விட வேண்டும்.
கருவறையில் இருந்து வரும் தெய்வீக அலை சக்தி, நம் உடம்பு முழுவதும் பரவிச் செல்லும் வகையில் சுவாசிக்க வேண்டும். இப்படி செய்தால் நாம் புத்துணர்ச்சி பெற முடியும். சித்தர்கள், ஞானிகள், மன்னர்கள் கருவறை சுவாசத்தின் சூட்சமத்தைத் தெரிந்து கொண்டே வழிபாடுகள்
செய்தனர்.
அவர்கள் மூலவரை பார்த்து அர்ச்சனைப்பாடல், வேண்டுதல், என பல வழிகளில் கவனத்தை செலுத்தினாலும் கூட
கருவறை சுவாசத்தையே பிரதானமாகக் கருதினார்கள்.
நமது சுவாசத்தில் சூரிய கலை, சந்திரகலை, அக்னி கலை என்று மூன்று வகை கலைகள்
இருக்கிறது.
நமது மூக்கின் வலது பக்க துவாரம் வழியாக மட்டும் சுவாசம் நடப்பதை சூரிய கலை
என்பார்கள். இடது பக்க நாசியில் மட்டும் சுவாசம்
நடைபெற்றால் அது சந்திரகலை எனப்படும். மூக்கின் இரு துவாரங்களிலும் சுவாசம் நடைபெறுமானால் அது அக்னி கலை என்பார்கள். சிலர் இதை சுழிமுனை என்றும் சொல்வதுண்டு.
இந்த சுவாச நிலைக்கு ஏற்ப நாம் கருவறை தெய்வத்தை வழிபாடு செய்தால் அதற்கேற்ப
பலன்கள் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் கண்டுபிடித்து கூறியுள்ளனர். அதாவது சூரிய கலையான வலது நாசியில் சுவாசம நடைபெறும் போது சிவபெருமான், விநாயகர், முருகன் மற்றும் பொதுவான ஆண் தெய்வங்களை
வழிபடலாம்.
சந்திர கலையான இடது நாசியில் மட்டும் சுவாசம் நடக்கும் போது விஷ்ணு, லட்சுமி, அம்பாள் மற்றும் பெண் தெய்வங்களை வழிபட
வேண்டும். சுழிமுனையான இரு நாசிகளிலும் சுவாசம்
நடக்கும் போது ஆஞ்சநேயர், சாஸ்தா போன்ற தெய்வ வடிவங்களை வழிபடுதல்
வேண்டும். இந்த வழிபாட்டை 100 சதவீதம் சரியாக செய்தால், சகல வசதி வாய்ப்புகளையும் சொத்து, சுகங்களையும் பெறமுடியும் என்று கணித்துள்ளனர். கருவறையில் ஒரே ஒரு விளக்கு தொங்க விட்டிருப்பார்கள்.
அல்லது ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ள கோவில்களில்
கர்பகிரகத்ததிற்க்கு பின்னால் ஒரு செயற்கை ஒளி வட்டத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இவை தான் கருவறையில் உள்ள இறை ஆற்றல்களை வெளிப்பக்கத்துக்கு எகிற செய்கிறது.
சங்க கால மக்கள் வடக்கு நோக்கி அல்லது கிழக்கு நோக்கி வழிபாடு செய்தல் வேண்டும் என்ற வழிபாட்டு விதியை கடை பிடித்தனர்.
சங்க கால மக்கள் வடக்கு நோக்கி அல்லது கிழக்கு நோக்கி வழிபாடு செய்தல் வேண்டும் என்ற வழிபாட்டு விதியை கடை பிடித்தனர்.
கருவறை முன்பு நின்று மூல விக்கிரகத்தை பார்த்து மனதை ஒருமுகப்படுத்தும் போது
மனதில் அமைதி உண்டாவதை கண்டு பிடித்தனர். இதன் தொடர்ச்சியாக மனிதன் கீழ் நிலையில் இருந்து மேல் நிலைக்கு உயர முடியும்
என்பதை உணர்ந்தனர். இதுதான் கருவறை மூலவருக்கு பல்வேறு வகையான
அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, ஆராதனை போன்றவை தோன்றுவதற்கு வித்திட்டது.
தினம், தினம் இந்த இறை ஆற்றல்கள் திரண்டு வெளி
வருகிறது. அதனால்தான் கருவறையில் பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, எண்ணை என எந்த பொருள் கொண்டு அபிஷேகம்
செய்தாலும் அவை நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது.
கருவறை நைவேத்தியங்கள் மகத்துவம் பொருந்திய மருந்தாக மாறுவதற்கு இறை
ஆற்றல்களே காரணமாகும்.
கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் போதும், நைவேத்தியம் படைக்கும்போதும் திரை போட்டு மூடி விடுவார்கள். தீபாராதனை காட்டும்போது திரையை விலக்குவார்கள்.
கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் போதும், நைவேத்தியம் படைக்கும்போதும் திரை போட்டு மூடி விடுவார்கள். தீபாராதனை காட்டும்போது திரையை விலக்குவார்கள்.
இதிலும் விஞ்ஞான தத்துவமே பின்புலமாக உள்ளது.
கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும்.

இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை
புத்துணர்ச்சி பெறச் செய்யும
இந்த உலகம் முழுக்க இறை சக்தி நிரம்பி இருந்தாலும் வெளியில் கடவுளை வணங்கினால் வினைகள் வெதும்பும். ஆனால் கருவறை மூலவரிடம் வழிபட்டால் வினைகள் பொசுங்கும். கருவறை மூலவரிடம் நம் மனதையும் ஆத்மாவையும் பயிற்சி செய்து ஒடுங்க செய்ய முடியும்.

பொதுவாக கோவிலுக்கு சென்று வழிபடும் போது உத்தம நமஸ்காரம் (ஒரு நொடியாவது மனதை ஒருமுகப்படுத்துவது), அஷ்டாங்க நமஸ்காரம் (உடலின் 8 அங்கங்களும் தரையில்படும்படி வணங்குவது) பஞ்சாங்க நமஸ்காரம் (உடலின் 5 அங்கங்கள் தரையில்படும்படி வணங்குவது) ஆகிய மூன்று முறைகளில் வழிபடலாம் என்று ஆகம விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கருவறை முன்பு வழிபடக்கூடிய உத்தம நமஸ்காரம் முக்கியமானது. அர்ச்சுனன் தினமும் கூடை, கூடையாக பூக்களை கொட்டி இறைவழிபாடு செய்தான். ஆனால் பீமனோ இரண்டே இரண்டு பூக்களை எடுத்துப் போட்டு சாமி கும்பிடுவான். இதில் மனதில் கர்வமே இல்லாத பீமன் வழிபாட்டையே கடவுள் ஏற்றுக் கொண்டார். இது மகாபாரதம் காட்டும் பிரார்த்தனை கோட்பாடு. இதையே நாமும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.
பீமன் போன்று மனதில் எந்த கர்வமும், தலைக்கனமும் இல்லாமல் கடவுளை வழிபடும் போது, உடம்பும், மனமும் ஒரே நேர் கோட்டில் புவியீர்ப்பு நிலையில் நின்று காந்த சக்தியை பெற முடியும்.
பீமன் போன்று மனதில் எந்த கர்வமும், தலைக்கனமும் இல்லாமல் கடவுளை வழிபடும் போது, உடம்பும், மனமும் ஒரே நேர் கோட்டில் புவியீர்ப்பு நிலையில் நின்று காந்த சக்தியை பெற முடியும்.
இரு கரம் கூப்பி, தலை குனிந்து வணங்கும் போது, தலைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீர்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தலையை மட்டும் குனிந்து வழிபடுவதை ஏகாந்க நமஸ்காரம் என்பார்கள். மூலவருக்கு தீபாராதனை காட்டும் போது தலைக்கு மேல் கையைத் தூக்கி வழிபடுதல் வேண்டும். இதற்கு ‘‘திரியங்க நமஸ்காரம்’’ என்று பெயர். இந்த வழிபாடுகளின் போது நம்முள் ஏற்படும் காந்த அலைகளே,

கர்ப்பக்கிரகத்தில் குடி கொண்டிருக்கும் மூலவர் விக்கிரகங்களை அடைந்து, நம்முடைய உணர்வுகளை வெற்றி பெறச் செய்கிறது.
அதற்காகத்தான் கருவறையில் ஆகம விதிப்படி 16 வகை உபச்சாரங்களை மூலவருக்கு செய்வார்கள். அதை சோட சோபசாரபூஜை என்பார்கள். அந்த 16 வகை உபசாரங்கள் வருமாறு:-
அதற்காகத்தான் கருவறையில் ஆகம விதிப்படி 16 வகை உபச்சாரங்களை மூலவருக்கு செய்வார்கள். அதை சோட சோபசாரபூஜை என்பார்கள். அந்த 16 வகை உபசாரங்கள் வருமாறு:-
1. ஆவாகனம் -இறைவனை எழுந்தருள செய்தல், 2. இறைவன் அமர ஆசனம் அளிப்பது, 3. பாத்யம், 4. அர்க்கியம், 5. ஸ்நானம், 6.வஸ்திரம், 7ஆசமநீயம்,8.சந்தனம் அணிவித்தல், 9.மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்தல்,10.தூபம11.தீபம்,12.நிவேதனம், 13. தாம்பூலம், 14. கற்பூர ஆரத்தி,15. புஷ்பாஞ்சலி,
16. பிரதட்சணம் என்பவை ஆகும்.
நாம் அடுத்தமுறை கோவிலுக்குள் செல்லும் பொழுது, மேலே கூறப்பட்டுள்ள தத்துவங்களை மனதிற் கொண்டு, அதன்படி முடிந்தவரை கடைப்பிடித்து கடவுளின் பரிபூரண அருளை பெறுவோமாக.
ஓம் நமசிவாய, ஓம் நாராயனாய, நமோ நமஹ!!!
Best wishes for a right topic starting. Keep sharing more such classic information.
ReplyDeleteThanks. I need your good wishes and blessings
DeleteThanks very much for this enlightening blog
Deletevaidyanathan
நன்றி
Delete