Friday, 26 June 2015

சித்ரா பவுர்ணமி மற்ற பவுர்ணமியைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது.ஏன்?


மாதந்தோறும் பெளர்ணமி வந்தாலும் சித்திரையில் வரும் பெளர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது.
புராணக் கதைகளின்படி, னிதர்களின் பாவ, புணணியக் கணக்குகளை எழுதும்சித்ர குப்தன் அவதரித்த நாளும் ‌‌ன்றுதான்.

அவர்சிவன் வடித்தசித்திரத்தைக் கொண்ட உருவாக்ப்பட்டதாலும், ‌சித்திரை மாதத்தில்பிறந்ததாலும்சித்ர குப்தன் என்று அழைக்கப்படுகிறார்.
சித்ரகுப்தன் பிறந்த கதை

சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தை ஒவியத்தை வரைந்தார்.

அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம், “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.” என்று கூறி கொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சிகாற்றை அந்த ஒவியத்தின் மேல் பதித்தார்.

ஈசனின் மூச்சுக் காற்று சில்லென்று ஓவியத்தில் பட்டஉடன், அந்த ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர் பெற்று சிரிக்க ஆரம்பித்து ஒரு அழகான குழந்தையாக வெளிவந்தது.

இந்த அற்புதத்தை கண்ட பார்வதிதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்து, “நான் வரைந்த குழந்தை ஒவியம், ஒரு நிஜ குழந்தையாக மாறியதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் வரைந்த சித்திரம் குழந்தையாக மாறியதால் இந்த குழந்தைக்கு சித்திர குப்தன் என அழைக்கபடட்டும்என்று ஆசி வழங்கினார்.

சித்திரகுப்தன் தோன்றிய ஒவ்வொரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா எடுத்து சித்திரகுப்தரை வணங்குவது நல்லது.

சித்திர குப்தனுக்கு பதவி 



ஒருநாள் யமதர்ம ராஜனுக்கு மனகவலை அதிகமாகிக்கொண்டே போனது. தன் மனகவலையை சிவபெருமானிடம் சொன்னார். “இறக்கும் ஜீவராசிகளை அழைத்துவரும் போது அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களையும், தண்டனைகளையும் தர வேண்டும் என்பது நீங்களும் விஷ்ணுபகவானும் எமக்கு கட்டளையிட்டீர்கள். 

ஆனால் யார் எவ்வளவு பாவ புண்ணியங்கள் செய்தார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது?” என்று தன் மன கவலையை தெரிவித்தார் யமதர்மராஜன்.

உன் கேள்வியை ஜீவராசிகளை படைக்கும் பிரம்மனிடமே கேள். அவர் இதற்கு தீர்வு சொல்வார்.” என்றார் சிவபெருமான்.

யமதர்மராஜன், பிரம்மனிடம் சென்று தன்னுடைய கவலையை சொன்னார். அதற்கு பிரம்மதேவர், “அட இதுதானா உன் கவலை.? சக்திதேவியின் திருக்கரங்களால் வரையபட்ட ஒரு சித்திரம், சிவபெருமானின் அருளால் உயிர் பெற்று ஒரு ஆண் குழந்தையாக வளர்கிறது. அவன் பெயர் சித்திர குப்தன்.
சித்திர குப்தனை உன் யமலோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன். அவன் உனக்கு உறுதுணையாக இருந்து, யார் எந்த அளவுக்கு பாவ-புண்ணியங்கள் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன் கவனித்து கணக்கு எழுதுவான். அதனால் உன் மனகவலையை ஒழித்து உன் தர்மபடி பணி செய்.” என்று ஆலோசனை வழங்கினார் பிரம்ம தேவர்.

அதன்படி சித்திர குப்தனை உடனே அழைத்து, யமதர்மராஜனிடம் அறிமுகப்படுத்தினார் பிரம்ம தேவன். பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன், தன்னுடைய ஒரு கையில் எழுதுகோலும், மறுகையில் எழுதுகோலுக்கு தேவையான மை நிறைந்த கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார்
.அன்றிலிருந்து இன்றுவரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்யும் ஒவ்வொரு பாவ-புண்ணிய கணக்கை சித்திரகுப்தர் எழுதி வருகிறார்.

நமது பாவ-புண்ணியங்களை பொறுத்து, சித்திர குப்தன் எழுதும் கணக்கின் அடிபடையில்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் அனுபவிக்கும் இன்பமும்துன்பமும் நிகழ்கிறது.

பூஜை:
சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து ,
"சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம். 
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்"!!!
என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். சித்ரா பவுர்ணமி அன்று சிவலிங்கத்தை வில்வஇலைகளால் அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்கு இரட்டிப்பாகும்
வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறலாம்..
பூஜையின் பலன்
சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.
கோயில்

இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது.

சித்ரகுப்தனுக்கென்று தென்இந்திய அளவில் தனி ஆலயம் காஞ்சிபுரத்தில்தான் உள்ளது. 

காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.


தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் சித்ரா பௌர்ணமி விழா வெகு சிறப்பாக கருதப்படுகிறது. அது ஏன்?
ஒருமுறை விருத்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.
அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் கெடுதல் நீங்கும் என்று கூறினார்
அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார்


இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார்.

அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் சிறப்பாகக் கருதப்படுகிற்து.

சித்திரகுப்தர் ஸ்லோகம்

சித்திரைப் பருவந்தன்னில் உதித்தனை 

சித்ரகுப்தர்

அத்தின மவனை உன்னி அர்ச்சனை 

கடன்களாற்றிற்

சித்தியும் பெறுவர் பாவம் தீரமே யேமனூரில்


இத்திறனறிந்தே யன்னேனிரங்கு வானறங்கள் 

சொற்றே


ஓம் தத்புருஷாய வித்மஹே சித்ரகுப்தாய தீமஹிதன்னோ சித்ரகுப்த ப்ரசோதயாது..




5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Thank you sir,
    I never knew this Purana story
    Kind regards
    Kalyani venkataraman

    ReplyDelete
  3. Thank you sir,
    I never knew this Purana story
    Kind regards
    Kalyani venkataraman

    ReplyDelete
  4. Thank u very much for sharing the importance of chitra pournami.

    ReplyDelete