சிவனாருக்கு உகந்தது வில்வம் என்பதை நாம் அறிவோம். சிவனிற்கு பிரியமான வில்வர்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாச்சத்தைப் பெறமுடியும்
ஏழு ஜென்ம பாவம் விலக... ஒரு வில்வம் போதும் என்று கூறுவதுண்டு !!!!
வில்வத்தில்,
மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன.
வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
வில்வத்தில் லக்ஷ்மி வசம் செய்கிறாள் என்பது ஐதீகம்
வில்வ வழிபாடும் பயன்களும் :
மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம்.
ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன.
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு
முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்.
வில்வத்துக்கு நிர்மால்யம்
கிடையாது என்பதால்,
சிறிது தண்ணீரை
வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
சிவபெருமானை. ஒரு வில்வத்தினால் பூஜை செய்தால்,அது ஒரு லட்சம் ஸ்வர்ண புஷபங்களால் பூஜை செய்ததற்க்கு சமமாகும்.
மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப்
பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!
மண்ணுகில் உள்ள ஆன்மாக்களின்
பாவங்களைப் போக்கவென ஈசனின் இச்சா, கிரியா, ஞான வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே இவ்விருட்சத்தைப்
பூஜிப்பவர்கள் சகல சித்திகளும் அடைவார்கள்.
வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள்
விளக்கமாகக் கூறுகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின்
வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன.
ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க, ஈசனும் திருவைகாவூர் திருத்தலத்தில்
வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்.
அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத்
தவமிருந்ததால் திருவைகாவூர்
என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெற்றது.
சிவனுக்குறிய நட்சத்திரம்.திருவாதிரை. அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால், சிவனின்
சூட்டினைத் தணிக்க
நம் முன்னோர்கள்
குளிர்மை பொருந்திய
வில்வத்தை சார்த்தி
வழிபட்டுள்ளனர்.
அத்துடன், சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம்.. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூஜைகளுக்கு
வில்வத்தை ஏற்றுக் கொண்டான். ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும்
துன்பங்களைப் போக்க
வல்லது.
ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால், இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமம்.. சகல பாவங்களும் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வில்வத்தின் இலை பலவகையான
நோய்களுக்கு மருந்தாக
விளங்குகின்றது.
மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை பௌர்ணமி சதுர்த்தி அஷ்டமி நவமி ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூஜைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.
வில்வத்தைப் பறித்து ஆறுமாதம்
வரை வைத்துப்
பூஜை செய்யலாம்.
உலர்ந்த வில்வம்
ஏற்கனவே பூஜித்த
வில்வம் ஆகியவற்றாலும்
பூஜை செய்யலாம்.
அவ்வளவு புனிதமானது.
சிவ அர்ச்சனையில் வில்வ
அர்ச்சனை கோடி
புண்ணியம் தரவல்லது.
வீடுகளில் வில்வ மரம்
:
நாம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும். வில்வம் வளர்த்தால்,
வில்வமரத்தை வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்
ஆயிரம் பேருக்கு அன்னதானம்
செய்த புண்ணியம்
உண்டாகும்.
கங்கை முதலான புண்ணிய
நதிகளில் நீராடிய
பலன் கிடைக்கும்.
108 சிவாலயங்களை
வலம் வந்து
தரிசித்த பலாபலன்
உண்டாகும்.
இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ
அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ, அதீத சக்தி கிடைக்கும்.
வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து
பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவரிற்கு ஒருபோதும் நரகமில்லை.
வில்வம் பழந்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது
மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.
வில்வம் பறிக்கும்போது என்ன
சொல்ல வேண்டும்?
சிவபெருமானுக்கு
உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன்,
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும்
மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்.
மேலும், அவ்வாறு பறிக்கும்போது
வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச்
சொல்ல வேண்டும்..
நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய
ஹேதவே
அர்சனார்த்தம் லுனாமி
த்வாம் த்வத்பத்ரம்
தத்க்ஷமஸ்வ மே.
இதன் பொருள்:
போகமோட்ச உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாக்ஷத்தை அளிப்பதற்குக் காரணமாகவும்
உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்.
ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு
மருத்துவனும், கருணைக்கடலுமான
சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.
நாமும் நம்மால் முடிந்த அளவு சிவனை வில்வத்தால்
அர்ச்சனை செய்தும், சிவாலயங்களில் வில்வ தளங்களை வாங்கி கொடுத்த்தும் பயன் பெருவோமாக.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Well explained and with a video link too !! Good going indeed.
ReplyDeletesuper explanation. Thanks
ReplyDeleteThanks for your comments
ReplyDeleteThanks for your comments
ReplyDelete