Thursday, 2 July 2015

கேட்டலே சிறந்தது!!!!!!!




பகவானிடம் பக்தி கொள்பவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. பக்தி என்பது அவரவர் மனோபாவத்திற்கு ஏற்றதாக அமைகிறது. இப்படி பக்தியை ஒன்பது விதமாக வகைப்படுத்த முடியும்.


சிரவணம் - பகவானுடைய நாமங்களையும், அவனுடைய கல்யாண குணங்களையும் கேட்பது.

கீர்த்தனம் - பகவானின் பெருமைகளைப் பேசுவது..

ஸ்மரணம் - எப்பொழுதும் பகவானை நினைத்துக் கொண்டிருப்பது

பாத சேவனம் - பகவான் கால்களில் விழுந்து வணங்குவது

வந்தனம் - பகவானை வணங்குவது, அவனைப் போற்றுவது

அர்ச்சனம்  பகவானுக்கு மலர்களையும், கனிகளையும் கொடுத்து மகிழ்வது

தாஸ்யம் - பகவானின் வேலைக்காரனாக நடந்து கொள்வது

ஸக்யம் - பகவானிடம் நட்பு கொள்வது.

ஆத்ம நிவேதனம் - பகவானுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்வது

இராமாயணத்தில் இந்த ஒன்பது வகையான பக்திக்கும் சிலரை
உதாரணமாகக் கொள்ள முடியும்.

1.  சிரவண பக்தி - அனுமார் - இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே
   இருந்தவர்.

2.  கீர்த்தன பக்தி - வால்மீகி - இராமாயணம் இயற்றியவர்.

3.  ஸ்மரண பக்தி - சீதை - அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட
    சீதை இந்த பத்து மாதம் இராமனையே நினைத்திருந்தாள்..

4. பாதசேவன பக்தி - பரதன் - இராமனின் பாதுகையை இராமனாக
   நினைத்து வணங்கியவன்.

5. வந்தன பக்தி - வீபீஷணன் - இராவணனின் தம்பியானவன்,
  இராமனையே வணங்கி வந்தான்.

6. அர்ச்சன பக்தி - சபரி - இராமனுக்கு நல்ல பழங்களைக் கொடுக்க
  வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு  பழத்தையும் தானே கடித்துப்
  பார்த்து அளித்தவள்.

7. தாஸ்ய பக்தி - இலட்சுமணன் - இராமனுடனேயே இருந்து அவரதி
  சொல்படி நடந்தவன்.

8. ஸ்க்ய பக்தி - சுக்ரீவன் - இராமனுடன் நட்பு கொண்டவன்.

9. ஆதம நிவேதனம் - ஜடாயு - இராவணனிடமிருந்து சீதையைக் 
  காப்பாற்ற முயன்று தன் உயிரைக் கொடுத்தவர்.

இந்த ஒன்பது வகை பக்தியில் எது சிறந்ததாக கருதப் படுகிறது?

நமக்கு பார்க்க பிடிக்காத விஷயங்களை கண்ணை மூடிக்கொண்டு தவிர்க்கலாம்.

பேச பிடிக்கவில்லை என்றால், வாயை மூடிக் கொள்ளலாம்.

ஆனால்  நல்ல விஷயங்களை  எப்போதுமே  கேட்கவேண்டும் என்பதற்க்காக தான்  காது திறந்தே இருக்கிறது.

நடந்து கொண்டே இருந்தால், கால் வலிக்கும்,

பார்த்துக் கொண்டே இருந்தால்  கண் வலிக்கும்

பேசிக்கொனண்டே இருந்தால் வாய் வலிக்கும்.

எழுதிக் கொன்டே இருந்தால் கை வலிக்கும்
.
ஆனால்  கேட்டுக்கொண்டே இருந்தால் காது வலிக்காது!!!!

அதனால்  எப்பொழுதும் நல்ல விஷயங்களை கேட்டுக்கொனண்டே இருக்க  வேண்டும்..

ஆண்டாள் திருப்பாவையில் கேசவனை பாடு என்றும், கேட்டேகிட என்றும் பாடியுள்ளாள்.






சுகப்ரும்ம மஹரிஷி பரீட்சித்து மஹராஜாவிடம்,  ஏழு நாள் பாகவதம் சொன்ன என்னைவிட, , அதைக் கேட்ட உனக்கு புண்யம் அதிகம் என்ரறு சொன்னாறம்.





கருவிலேயே நாரதர் மூலம் நாராயண்ன் பெருமையைக் கேட்ட ப்ரகலாதன்,  கூப்பிட்ட உடநயேநரசிம்மர் வந்தாரே!!!!




ஆஞ்சனேயர். எங்கு ராமாயணம் நடந்தாலும் அங்கு இரு கைகளையும் தலையின் மேல் குவித்து அஞ்சலி செய்த வண்ணம் கேட்டுக் கொண்டிருப்பார்.. சிரவண பக்தியை இன்றும் செய்து கொண்டிருப்பவர்




இவை எல்லாம் சிரவண பக்திக்கு மிக சிறந்த உதாரணம்.


நாம் நம் அன்றாட வாழ்க்கையில்,, மிக எளிமையான இந்த சிரவண பக்தியை கடைப்பிடித்து பலன் பெருவோம். 



Video Link:



ஶ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்


4 comments:

  1. ஓம். வலைப்பூ நன்கு பரிமளிக்கிறது வாழ்த்துக்கள்.
    என்பதற் ’க்’ காக -----வல்லின ஒற்றெழுத்திற்குப் பின்னர் பிறிதொரு ஒற்று வரக்கூடாது என்று இலக்கணம் சொல்கிறது.. எனவே ’’க்’ வரக்கூடாது. ’என்பதற்காக என்றே வரவேண்டும்.
    தகவலுக்காக மட்டும்,
    வெ.சுப்பிரமணியன் ஓம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, விபரமாக எடுத்து கூறியமைக்கு !!

      Delete
    2. Thank U for pointing out. information noted

      Delete
    3. Nicely explained about different kind of bhakti! Pray the Almighty for your continued service!! Periyava Charanam Smaranam.

      Delete