Sunday 5 July 2015

நடராஜரின் பெருமை:- The world and cosmic dance of shiva


நடராஜரின்  பெருமை:- The world and cosmic dance of shiva

இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து பல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்ச்சி யின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பதுதான்.
அதன் அடிப்படையில் பல விஞ்ஞானிகள் ‘கடவுள் துகள் (dust)  ஆராய்ச்சி மேற்கெண்டனர்.



ஜெனீவாவில் நடந்த ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கொல்கத்தாவின் சாஹா அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சி மையம், மும்பையின் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம், அலகாபாத்தின் ஹரிஷ்சந்திரா ஆராய்ச்சி மையம் புவனேஸ்வரின் இயற்பியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் பங்கு வகித்தனர்.



உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர்.





உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் ஓர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள் என்று கூறினார். ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்டனர்.

அதற்கு அவர் கூறிய காரணம்
சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது. மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பதாகக் கூறினார்.

விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர்.
அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார்.

மேலும் இந்த உலகத்தைப்படைத்த சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்தன்ர்.

செர்ன் ஆய்வு கூடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சிவனின் சிலையின் பீடத்திற்கு அருகிலுள்ள ஒரு பலகையில், ப்ரிட்ஜாப் காப்ரா தன்னுடைய ’The Tao of Physics' புத்தகத்தில் எழுதிய சில வரிகள் இது:

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்தியக் கலைஞர்கள், உலோகங்களில் நடராஜரின் நடனத்தை அழகாகச் சித்திரித்தனர்..

நம் நவீன காலத்தில் பௌதிக விஞ்ஞானிகள், மிகவும் நுண்ணிய தொழில் நுட்பத்தின் மூலமாக இசைவுடன் கூடிய பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடன வகைகளைச் சித்திரிக்கிறார்கள்.

இந்தப் பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடனம், நவீன பௌதிகத்தையும், ஹிந்து சமயக் கலைகளையும், பண்டைய புராணங்களையும் இணைக்கிறது...

நவீன விஞ்ஞானம், சீராக இணைந்து செயல்படும் படைப்பு மற்றும் அழிப்பு இரண்டும் (தோன்றி மாறும் பருவ காலங்கள், பிறந்து இறக்கும் ஜீவராசிகள் மட்டுமல்லாமல்) உயிரில்லாத வஸ்துகளுக்கும் பொருந்தும். உயிரில்லாத ஜட வஸ்துகளும் தோன்றி மறைகின்றன என்று நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. 

ஆகவே, நவீன பௌதிக விஞ்ஞானிகளுக்கு சிவனுடைய நடனமே உப அணுக்களின் நடனம்”.



காப்ராவுக்கு பசிபிக் கடல் கரையில் ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாகத்தான் அவர் நடராஜரின் நடனத்துக்கும், அணு விஞ்ஞானத்துக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்ந்தார். கடலைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு கடல் அலைகள், சூரிய கிரணங்களின் அலைகள், சிந்தனை அலைகள் எல்லாமே ஒரே சீரான (அணு விஞ்ஞான) நடனத்தின் பிரதிபலிப்பாகப் பட்டது. ‘எப்படி இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியேதான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக் காண்கிறது’ என்று கூறினார் காப்ரா.
பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது.

கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (cosmic dance). அதுவே தான் நடராஜரின் நடனம் என்கிறார் காப்ரா.

கோடானுகோடி அணுக்களை ஆட்டிப் படைக்கும் அவற்றுக்கு ஆதாரமாக இருக்கும் உப அணுவைத்தான், இப்போது கண்டுபிடித்துள்ளதாக செர்ன் அமைப்பின் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

‘நடராஜரின் பிரபஞ்ச நடனமும், அணுக்களின் நடனமும் ஒன்றே’ என்று கூறும் அளவுக்கு, விஞ்ஞானமும் ஹிந்து ஆன்மிகமும் நெருங்கி விட்டிருக்கிறது. அதனால்தான் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் ஆய்வு கூடத்தில், தில்லை நடராஜர் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.














பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு பொருளின் தோன்றலும், மறைவும் கடவுள் துகளின் நடனத்தையே சார்ந்திருக்கிறது என்கிறது விஞ்ஞானம். இதையே இந்து மதம், உலகிலுள்ள எந்த ஒரு பொருளினது தோன்றலும், மறைவும் நடராஜரினது ஆடலையே சார்ந்துள்ளது என்கிறது.

ஆனந்த தாண்டவத்தின் போது இப்பிரபஞ்சம் தோற்றமும், ருத்ர தாண்டவத்தின் போது மறைவும் பெருகிறது என்பது இந்து மதக் கொள்கை. எனவே தான் சிதம்பர நடராஜருக்கு இந்த உலக சபையை ஆட்டுவிப்பதால் சபாநாயகர் என்ற பெயர் உள்ளது என்கிறது இந்து மதக் குறிப்பு.

இது மட்டும் அல்ல பிரபஞ்சம் குறித்த ஆய்வில் மிகப் பிரபலமான இன்னொரு அறிஞரான திரு கார்ல் சாகன்.  “ பிரபஞ்சம் குறித்த விரிவான அறிவியலை இந்து மதம் நமக்கு கற்றுத் தரும் என்கிறார். அண்டம், பேரண்டம் தோன்றி மறைவது, விரிவடைந்து சுருங்குவது முதல் அண்டம் உருவானதுக்கு காரணமான பிக் பாங்க் வரை அனைத்தையுமே நடராஜரின் வடிவம் உணர்த்துகிறது” என்கிறார்.

உலகம் பல விதம். என்று ஒரு பழமொழி இருப்பது நமக்கு தெரிந்ததே!!!

உணவு, உடை கலாசாரத்தில் மாற்றம் இருப்பினும், அனைத்து மக்களும் கண்ணால் காண்கிறோம்,, காதால் கேட்கிறோம், வாயால்  பேசுகிறோம்..

இதில் ஏதும் மாற்றம் இல்லை . ஆனால் இந்த பழமொழி எப்படி வந்தது? இதற்கு, திரு. க்ருபானந்த வாரியார் கூறிய விளக்கம்


உலகு, அம்பல விதம்என்னும் கூற்றே மருவி, உலகம் பலவிதம் என்று மாறிவிட்டது.


அதாவது, அம்பலத்தில் ஆடும் நடராஜப் பெருமானின் ஆட்டத்தினால்

,இவ்வுலகு இயங்கிக்கொண்டிருக்கிறது.. அவர் ஆட்டத்தை நிறுத்தினால்,

இந்த உலகத்தின் இயக்கமும் நின்றுவிடும் என்ற தத்துவத்தை 

விளக்குவதறகாகவே, ‘ உலகு அம் பலவிதம் ‘என்று நம் முன்னோர்கள் 

கூறினார்கள். அதுவே மருவி,  ‘ உலகம் பலவிதம் ‘ ஆகிவிட்டது.



VIDEO LINK 1
  CERN AND SHIVA
                                       

 VIDEO LINK 2

GOD PARTICLE


சர்வம் சிவ மயம் !!!!!!!


















1 comment:

  1. Another topic less known to people, generally. Nice posting with video links to have better understanding too.

    ReplyDelete